இளையதளபதி விஜய் இன் Leo இல் யாழ்ப்பாண ஜனனி இந்த கேரக்டரா! வெளியான தகவல்
பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டை தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யடைந்தவர்கள் ஏராளம்.
லாஸ்லியா, தர்சன்
அந்தவகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, தர்சன் இவர்களை தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனியும் இப்பொழுது தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்மூலம் சேர்த்து வைத்துள்ளார்.
சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் 70 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினார்.
விஜய்க்கு மகளாக நடிக்கிறேன்
இந்த நிலையில் பிக்பாஸ் ஜனனி, விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவர் இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஜனனியிடம் இது குறித்து கேட்டபோது இப்போதைக்கு என்பது கேரக்டரை வெளியே சொல்ல முடியாது என்றும் கம்பெனி சீக்ரெட் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கிறேன் என்பதை அவர் மறுக்கவில்லை என்பதால் அவர் விஜய் மகள் கேரக்டரில் தான் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இளையதளபதி விஜய் இன் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அப்போது விஜய்யுடன் ஜனனி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.