யாழ். இளவாலையில் சட்டவிரோதமான பொருளுடன் இரு பெண்கள் அதிரடி கைது!
Sri Lanka Police
Jaffna
By Shankar
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் 21 லீட்டர் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (14-11-2022) இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 27 வயதுப் பெண் 16 லீட்டர் கசிப்புடனும், 42 வயதுப் பெண் 5 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US