மரண அபாயத்தில் யாழ் மாவட்டம்; திருந்தாத மக்களின் வைரலாகும் வீடியோ
மின்னல் தாக்கி உயிரிழந்த யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலை அரச பேரூந்து சாரதி மதனின் இறுதி ஊர்வலம் தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மரண அபாயத்தில் யாழ் மாவட்டம் உள்ள நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடத்துவதானது சமூகத்திற்கு அச்சுறுதலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஹரீஸ்வரன், நிமிடத்திற்கு ஒருவர் மரணம் பதிவாகி வருவதாக மக்களை எச்சரித்துள்ளார்.
மேலும், ஒரு மரணம் இரு மரணம் என்றால் கடவுளால் காப்பாற்ற முடியும். நிமிடத்திற்கொரு மரணம் பதிவாகின்றமையால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் கொரோனா அபாயத்தில் நாடு உள்ள நிலையில் சமூகப்பொறுப்பின்றி மரணச்சடங்கு போன்ற இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.