பறந்துகொண்டிருந்த விமானத்தில் யாழ் புலம்பெயர் தமிழரின் மோசமான செயல்; வெளியான தகவல்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர், தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிக அளவு மதுபோதை
சந்தேக நபர் இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை பெற்ற நபர் இன்று (12) அதிகாலை 12.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஊடாக இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ளார்.
இதன்போது குறித்த நபர் விமானத்திற்குள் மதுபானம் அருந்தியுள்ளார். பின்னர் சந்தேக நபர் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் , விமானப் பணியாளர்கள் இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரினால் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் அதிக அளவு மது அருந்தியிருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்ற நிலையில் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .