6 மாதங்களின் பின்னர் சேவையை ஆரம்பித்த யாழ்தேவி!
6 மாதங்களின் பின்னர் சேவைய ஆரம்பித்த யாழ்தேவி புகையிரம் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி காங்கேசன்துறை - கல்கிஸை இடையிலான யாழ்.தேவி புகைரத சேவைகள் இன்று தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரயாணத்தடை காரணமாக 6 மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்.தேவி புகையிரத சேவை இன்று காலை 5.55 மணியளவில் கால்கிஸை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.
மேலும் குறித்த புகையிரதம் மீண்டும் நாளை (04) காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை வரை மீண்டும் பயணிக்குமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா பரவல் காரணமாக இறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள் இன்று முதல் முன்னெடுக் கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.