யாழ் பண்பாட்டு மையம் திருவள்ளுவர் கலாச்சார மையமாக மாற்றம்
இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என இன்று சனிக்கிழமை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவியில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் , மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.