யாழில் கோர விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருந்த நபருக்கு நேர்ந்த சோகம்
யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி, வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த 71வயதுடைய வயோதிபர் ஆவார்.
இம் மாதம் ஆறாம் திகதி மாலை பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகாமையில் சைக்கிளில் சென்றவரை பட்டா வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.