தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம் விளைவித்த சிலர்
தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிவேந்தல் நிகழ்வை மாபெரும் உணர்வெழுச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில் பெருமளவு மக்கள் திரண்டு உணர்வெழுச்சியுடன் யாழில் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
நிகழ்வில் குழப்பம் விளைவித்த சிலர்
அதேசமயம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படும் அஞ்சலியில் இருதரப்பினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கபப்ட்ட நிலையில் அதனை குழப்பும் விதமாக சிலர் செயல்பட்டமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை வந்தடைந்த போது அவர்களை இறங்கவிடாது நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்த அனைவருடனும் அவர்கள் வலிந்து சண்டித்தனம் புரிந்ததாகவும் கூறபொபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.