யாழ் - கொழும்பு சேவை; நாளை முதல் அமுலாகவுள்ள நடவடிக்கை!
நாளை முதல் யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பரிசோதனைக்குட்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முகமாலையில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனை வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்துள்ளார்.
20 நிமிடங்கள் நிறுத்தம்
அதன்படி அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனுமதி பத்திரங்களும் நாளை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளது.
அனுமதிபத்திரங்கள் முகமாலையில் பரிசோதிக்கப்படுவதுடன் புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பேருந்து வவுனியாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்த நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.