ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம் ; செம்மணி புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த அறிக்கைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
அத்துடன், பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் ஊடாக குறித்த அறிக்கையை ஒக்டோபர் 15ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதன்படி, செம்மணி புதைகுழி வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஒக்டோபர் 19ஆம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறவுள்ளது.