யாழில் கரையொதுங்கிய தமிழக சாரதி அனுமதிப்பத்திரம்! மக்கள் மத்தியில் எழுந்த சந்தோகம்
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த நபருக்கு என்ன நடந்தது, சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையொதுங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி, வடமராட்சி கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் அண்மையில் 6 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன.
இதேவேளை கரையொதுங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் தமிழகத்தின் காலம்பாடி,
சிதம்பரம், என முகவரியிடப்பட்டுள்ளது.