சுவிட்சர்லாந்தில் விபரீத முடிவுக்கு முயன்ற யாழ் யுவதி! நபர் ஒருவரின் திருவிளையாடல்கள் அம்பலம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 வயதான திருமணமான யுவதி சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த மாமனாரின் கொடுமையால் குறித்த யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகின்றது.
யுவதியின் பெற்றோர் கண்ணீர்
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள யுவதியின் பெற்றோர் கண்ணீருடன்வெளியிட்ட தகவலில் ,
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபரொருவர் தனது 19 வயதான பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சுவிஸ்க்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார்.
அங்கு சென்று 3 மாதங்களே ஆன நிலையில் மாமனாரின் பாலியல் சீண்டல்களை தாங்க முடியாத யுவதி , மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கால் மற்றும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்ணின் தாயார் கூறி இருந்தார்.
அதிர்ச்சிதரும் தகவல்கள்
இந்நிலையில் யுவதியின் மாமனாரான புங்குடுதீவை சேர்ந்த நபர், சுவிஸ் நாட்டில் நீண்ட காலமாய் வாழ்ந்து வருவதுடன் அவர் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்குள்ள நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாய் பணியாற்றி வருரும் குறித்த நபர், பெண்கள் விடயத்தில் மிகவும் மோசமானவர் என கூறப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் நீண்டகாலமாய் பணியாற்ரி வருபவர் என்பதால் , தனது செல்வாக்கை பயன்படுத்து அங்கு வேலைக்கு செல்லும் பல பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், இதனால் பலர் வேலையை விட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மருமகளிடமும் தவறாக நடக்க முற்பட்ட காரணதாலேயே அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாது இந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கும் குறித்த நபர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.