கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்
இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான 'ANTONIO MARCEGLIA' என்ற போர்க்கப்பல் இன்று வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Frigate ரக 'ANTONIO MARCEGLIA' போர்க்கப்பல் 144 மீட்டர் நீளம் கொண்டது.
மொத்தமாக அந்த கப்பலில் 199 உறுப்பினர்கள் வருகைதந்துள்ளதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெமாண்டர் ALBERTO BARTOLOMEO கடமையாற்றுகின்றார்.
அத்துடன் இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் கப்பலின் உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.
வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் நாளை மறுதினம் இந்த கப்பல் நாட்டை விட்டுப் புறப்படவுள்ளது.