எலும்புகளின் வலிக்கு டாடா சொல்லும் நேரம் வந்தாச்சு!
எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து ஆகிய மூன்றும் முக்கியம்.
கூடவே உடற்பயிற்சிகளும் மிக அவசியம். அதாவது வெயிட் டிரெயினிங் பயிற்சிகள் எலும்புகளை வலுவாக்கும்.
பால் மற்றும் பால் உணவுகள் அனைத்திலும் கால்சியம் சத்து இருக்கும்.
முருங்கைக்காய், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவை எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.
முழங்கை மூட்டுகளில் வலி
பிரண்டையில் எலும்புகளை வலுவாக்கும் பிரத்யேக தன்மை உண்டு. எனவே பிரண்டையை அடிக்கடி துவையல் வடிவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
முழங்கை மூட்டுகளில் வலி என்பது அடிபட்டதால் வரலாம், அந்த அடியானது தசையிலோ, தசைநாரிலோ, எலும்பிலோ பட்டதால் ஏற்பட்டதாக இருக்கலாம். கிருமித் தொற்றினால் சீழ்ப்பிடித்து அதனாலும் வலி வரலாம்.
ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பினாலும் வரலாம். மூட்டுகளை அதிகமாக உபயோகப்படுத்துவதன் விளைவாகவும் வலி வரலாம். வலிக்கான காரணம் தெரிந்தால்தான் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
அடிபட்ட வலி
அடிபட்டதால் ஏற்பட்ட வலி என்றால் அதற்கான சிகிச்சையையும், எலும்பு முறிவு காரணமாக வந்தது என்றால் அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையையும், தசைநார் பாதிப்பு என்றால் பிசியோதெரபி சிகிச்சையையும் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை தசைநார் அதிகமாக முறிந்திருந்தால் அதற்கோர் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
கிருமித் தொற்றால் மூட்டுகளில் சீழ்ப்பிடித்திருந்தால், அதை நீக்கவிட்டு, ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும்.
ஆர்த்ரைட்டிஸால் ஏற்பட்ட வலி என்றால் அதற்கான சிகிச்சை வேறு. மூட்டுகளை அதிகப்படியாக உபயோகித்ததால் ஏற்பட்ட வலி என்றால், எந்தக் காரணத்தால் மூட்டு அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறதோ, அதைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இப்படி, காரணத்துக்கேற்ப பிசியோதெரபி, ஊசிகள், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா சேர்த்த ஊசிகள் போன்று பல சிகிச்சைகள் உள்ளன.
ஆண்களுக்கு
ஆண்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும்போது எலும்பு பாதிப்புகள் ஆரம்பிக்கும்.
அதுவே அவர்கள் உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கமுள்ளவர்களாக இருந்தால் அந்த பாதிப்பு குறைவாக இருக்கும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு மெனோபாஸ் வரை ஹார்மோன் சப்போர்ட் இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும்.
மெனோபாஸுக்கு பிறகு அது குறைவதால் எலும்பு ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
தீர்வு
பாதிப்புகள் வராமலிருக்க உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்துவதுதான் தீர்வு எனவும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.