மாலைதீவில் இருந்து கோட்டா புறப்படுவதாக தகவல்!
தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படும் நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் சிறிது நேரத்தில் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் காலை 11 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்படுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சிங்கப்பூர் பயணிப்பதற்காக குறித்த தனியார் ஜெட் விமானத்தின் வருகைக்காகவே, கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் நேற்றிலிருந்து காத்திருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் தற்போது தரையிறங்கியுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
பிந்திய தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து புறப்பட்டு சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 788 இல் சிங்கப்பூர் புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானம் ஜெட்டாவில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவுடன் அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.