அரசாங்கத்தை வீழ்த்துவது எனது எண்ணம் அல்ல - விமல்
அரசாங்கத்தை வீழ்த்துவது தனது எண்ணமும்,நோக்கமும் இல்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி கதிரையில் அமர வைத்ததில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான பங்காளி காட்சிகளின் பங்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் ஜனாதிபதி மறந்து செயல்படுவது போல தென்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள சிலர், ஜனாதிபதி தவறான முடிவுகளை எடுக்க வழிசமைக்கின்றனர். நாடு மக்களின் நலன் கருதிய முடிவுகளை எடுப்பதே ஜனாதிபதியின் பணியாக இருக்க வேண்டும்.
அதைவிடுத்து கட்சி நலன் சார்ந்த முடிவினை எடுப்பது கட்சிக்கு மட்டுமின்றி ஆட்சிக்கும் பாதகமாகவே அமையும் என தெரிவித்தார். நாடு மக்களின் எதிர்ப்புகளில் இருந்து இராஜாங்கத்தை காக்கவே பங்காளி காட்சிகள் நாங்கள் விருப்பப்படுகிறோம்.
மாறாக அரசை வீழ்த்துவது எங்கள் எண்ணம் அல்ல. இதனை ஜனாதிபதி அவர்கள் உணர்ந்து செயல்படவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.