இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் வெளியான முக்கிய தீர்மானம்
இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றுவது குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரித்தபோதே நீதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை
மேலும், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனையை நிறைவேற்றுவது ஒரு சிறந்த வழிமுறையில்லை என்பது குறித்துத் தெளிவாகவுள்ளார்.
நீதிமன்றம் தொடர்ந்தும் மரணதண்டனை தீர்ப்பினை வழங்குகின்ற போதிலும் இலங்கை 1976ஆம் ஆண்டுமுதல் மரணதண்டனையை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்துள்ளது என்றும் இதன் போது தெரிவித்துள்ளார்.