மத்திய கிழக்கு நிலைமை தீவிரம் ; மொஜ்தபா காமேனியின் இராணுவ முடிவுகளால் கதி கலங்கும் இஸ்ரேல்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஒருபோதும் போரை நாடிச் செல்லவில்லை என்றும், தற்போதும் போரை விரும்பவில்லை என்றும், ஆனால் தனது நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் எந்தவிதமான சமரசத்தையும் செய்யாது என்றும் மொஜ்தபா கமேனி நேற்று (9) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இஸ்ரேலை “இப்பிராந்தியத்தின் புற்றுநோய்” என்றும் “மனிதகுலத்திற்கே ஒரு சாபம்” என்றும் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது மத்தியஸ்தராக இருந்தவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டது குறித்து இஸ்ரேல் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மேலும், “யூத அரசு ஒரு புற்றுநோய்” என்ற கூற்று, அது முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்ற மறைமுக அர்த்தத்தை கொண்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.