அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பதிலடி ; ஈரானுக்கு கடும் இழப்புகள்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதலில், இஸ்ரேல் தரப்புக்கு மேலாதிக்கம் காணப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் வளைகுடா நாடுகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் மேற்கொள்வதன் மூலம் பிராந்திய பொருளாதாரத்தில் பின்னடைவு உருவாகி, அதனால் இஸ்ரேலுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு, அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலுக்கு வலுவாக இருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த மோதல் காலத்தில், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளில் சுமார் 44 மட்டுமே அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலால் தடுக்கப்பட்டதோடு, பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் தற்போது லெபனான் நாட்டின் ஒரு பகுதியை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், போரில் இஸ்ரேல் முன்னிலை வகிக்கும் வாய்ப்பு அதிகம் என சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேசமயம், ஈரான் தரப்பில் எதிர்பாராத இழப்புகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.