பாலஸ்தீன கவிஞரை விடுதலை செய்த இஸ்ரேல்!
காசாவிலிருந்து வெளியேற முயன்றபோது இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்ட பாலஸ்தீன கவிஞர் மொசப் அபு டொஹா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கவிஞரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இதனை உறுதி செய்துளார்.
கவிஞர் பணியாற்றிவரும் நியுயோர்க்கர் சஞ்சிகையின் ஆசிரியரும் அவர் விடுதலையானதை உறுதி செய்துள்ளார். கவிஞர் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என நியுயோக்கர் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
எகிப்திற்கு செல்ல முயன்றபோது கைது
அதேவேளை கவிஞர் தாக்கப்பட்ட நிலையில், தற்போது குடும்பத்துடன் இணைந்துள்ள அவர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் எகிப்திற்கு செல்ல முயன்றபோதே கைதுசெய்யப்பட்.டார்.
கவிஞர் மொசாப் அபு டொகா , வடகாசாவில் குண்டுவீச்சிற்கு மத்தியில் வாழ்வது குறித்த தனது அனுபவத்தை நியுயோர்க்கர் சஞ்சிகைக்கு எழுதிவந்துள்ளார்.