காசாவில் அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை கொன்ற இஸ்ரேல்! பெரும் அதிர்ச்சி
காசாவில் உள்ள அல் ஜசீரா அரபியின் பணியகத் தலைவரான Wael Dahdouh இன் மனைவி, மகன், மகள் மற்றும் பேரன் ஆகியோர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல் ஜசீராவில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள், தஹ்தூஹ், டெய்ர் எல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் புதன்கிழமை நுழைந்து அவரது மனைவி, மகன் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் சடலமாக பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, அவர் தனது 15 வயது மகன் மஹ்மூத்தின் முகத்தை குனிந்து தொட்டு அடையாளம் காட்டியுள்ளார்.
நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்த அவரது 7 வயது மகள் ஷாமினை உடலை தூக்கிக் கொண்டு அவளிடம் பேசுவது போல் இருந்த புகைப்படம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை முகநூலில் சவுதி அரேபியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த Ranees என்பவர் பதிவிட்டுள்ளார்.