சுரங்கப்பாதைகளுக்குள் இஸ்ரேல் - ஹமாஸ் கடும் மோதல்!
காசாவில் சுரங்கப்பாதைகளுக்குள் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான ஹமாஸ் - இஸ்ரேல் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தை தொடவுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்
இந்த நிலையில் நீண்ட சுரங்கப்பாதைகளுக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ரொக்கட்டை ஏவுவதற்கான தளங்கள் ஹமாசின் சுரங்கப்பாதைகளிற்குள் உள்ள தளங்கள் போன்றவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இயந்திரதுப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதற்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் அமைப்பினரை கொலை செய்துள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது..
இஸ்ரேல் காசாவின் வடக்கு தெற்கு வீதியை இரண்டு பகுதிகளில் இலக்வைத்தது இரண்டு திசைகளில் இருந்து காசாவை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.