ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் ; தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய வானூர்தி நிலையங்கள் இலக்கு
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள பல பகுதிகளில் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
இந்தத் தகவலை சர்வதேச ஊடகமான அல் ஜசீரா வெளியிட்டுள்ளது.
வானூர்தி நிலையங்கள் இலக்கு
இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள மற்றுமொரு விசேட அறிவிப்பின்படி, ஈரானிலுள்ள மூன்று முக்கிய வானூர்தி நிலையங்கள் இரவு நேர வான்வழித் தாக்குதல்களின் இலக்குகளாக அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான வானூர்தி நிலையங்கள்,
பஹ்ராம் வானூர்தி நிலையம் (Bahram Airfield) மெஹ்ராபாத் வானூர்தி நிலையம் (Mehrabad Airport) அஸ்மாயேஷ் வானூர்தி நிலையம் (Azmayesh Airfield) குறித்த தாக்குதல்கள் ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை மட்டுமே இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.
தெஹ்ரானின் முக்கிய போக்குவரத்து மையமான, மெஹ்ராபாத் வானூர்தி நிலையம் உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டமை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை முடக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.