வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல ஆலயம்!
சுகாதார வழிகாட்டலை மீறி செயல்பட்டதால் வவுனியா, தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை.
இந்நிலையில் , வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை மீறி 50 இற்கும் மேற்பட்டோர் வழிபாடுகளில் ஈடுபட்டதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
அத்துடன், ஆலயத்தில் நின்ற 25 பேரினது விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.