ஸ்டார்ட் மியுஸிக் சீசன் 3யில் பிரியங்கா இல்லையா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.
அதிலும் பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்ரார்ட் மியுஸிக் வேற லெவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சி சீசன்-2 முடிவடைந்து இருக்கின்ற நிலையில் சீசன்-3 யார் தொகுத்து வழங்குவார் எப்போது வெளியாகும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த மாதிரியே ஆரம்பமாகி விட்டது.

இவ் சீசன்3 தொடங்கிய நிலையில் இதனை தொகுத்து வழங்கவுள்ளார் மாகாபா ஆனந்த். இது எந்த அளவிற்கு சுவாரஸ்யமாக போகப்போகின்றது என்று தெரியவில்லை.
ஆனாலும் பெரிய அளவில் மக்களுக்கு நல்ல என்ரரெயின் ஆக இருக்கப்போகின்றது மட்டும் புரிகின்றது என சமூகவலைத்ளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இதில் முதலாவது எபிசோட்டில் பாரதிகண்ணம்மா குழு கலந்து கொண்டுள்ளனராம். அது எப்பொழுது வெளிவரும் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்களாம் என்பது குறிப்பிடத்தக்கது.