இதெல்லாம் தேசிய கொடிக்கு அபகீர்த்தி இல்லையா? வெடித்த சர்ச்சை!
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ (Gianni Infantino), இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் அணிந்திருந்த முககவசம் தொடர்பில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மஹிந்த ராஜபக்ஸ கால்பந்து கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கிலேயே அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
அதோடு கிஹானி இன்பென்டினோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், கிஹானி இன்பென்டினோ, இலங்கை தேசியக் கொடியுடனான முகக்கவசம் அணிந்திருந்தமை தொடர்பில், நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதாவது நாட்டின் மரியாதைக்குரிய தேசியக்கொடியினை முகக்கவசமாக அவர் அணிந்திருந்தமையானது அத்தேசியகொடியினை அவமதிபதாக அமையாதா என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை கடந்த காலங்களில் முன்னை இணைய விற்பனை நிறுவனம் ஒன்று இலங்கை தேசியக் கொடியினை செருப்பு மற்றும் கால் துடைப்பானில் பதித்திருந்தமை பெரும் பேசுபொருளான நிலையில் அதன் பின்னர், குறித்த விற்பனை நிறுவனம் அதனை நீக்கியிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
