இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதி இவரா!
இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பதவியேற்கவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்படவுள்ளார்.
புதிய இராணுவ, கடற்படை தளபதிகள் நியமனம்
மேஜர் ஜெனரல் ரொட்ரிக்கோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30) வெளியாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும், கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.