இப்படி தான் பிரெட் செய்றாங்களா? இதைப் பார்த்தா இனிமே ‘நோ’பிரட் தான்!
இந்தியாவில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
கைப்பேசிக்குள் நமது உலகம் வந்த பிறகு, பொழுதுபோக்கு முதல், பொழுதே இல்லாமல் போவது வரை அனைத்தையும் சமூக ஊடகங்கள் பார்த்துக் கொள்கின்றன.
சில சமயங்களில் மகிழ்ச்சி என்றால், பல சமயங்களில் தொல்லை என்று கைப்பேசிக்கு பாராட்டும், திட்டும் மாறி மாறிக் கிடைக்கிறது.
பொழுது போகவில்லை என்றால், சமையல் குறிப்பு முதல் சீரியல் வரை அனைத்தையுமே பார்த்து, கைப்பேசிக்குள் கண்ணை புதைத்துக் கொண்டு விடுகிறோம்.
அப்படித் தான், ஒருவர் இன்ஸ்டாகிராமில் சமையல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தபோது சிக்கிய பிரெட் மேக்கிங் வீடியோ அவருக்கு சுகாதார சீர்கேட்டை புரிய வைத்திருக்கிறது.
கான்பூரில் பேக்கரி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ இது.
மாவு கலப்பது முதல் பிரெட் பேக்கிங் செய்வது வரையிலான இந்த வீடியோ முழுவதும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை காட்டுகிறது.
இந்த வீடியோ எழுப்பும் கேள்விகளே, காணொளி வைரலாவதற்கும், நமது கவனத்தைப் பெறுவதற்கும் காரணமாகிறது.
வைரல் வீடியோ பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?