பிக்பாஸ் ராஜுக்கு இப்படி ஒரு திறமை இருக்கா... கொண்டாடிவரும் ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் தற்போது ராஜூ செய்த செயலைப் பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகின்றனர். இதுவரைக்கும் இவரை எப்படியோ என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமை என கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசன் தொடங்கி நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து வருகின்றனர். அதில் ராஜுவும் ஒருவர். இவர் இதற்கு முன்பு சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான்.
சீரியலில் கதாநாயகனுக்கு இணையாக காமெடி நடிகராக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் பாரிய இடத்தை பிடித்து விட்டார். தற்போது இவருக்கு இருக்கும் ரசிகர்கள் அளவை பார்த்துதான் தற்போது கூட இவர் இந்த சீரியலில் இல்லாவிட்டாலும் இவருக்கு பதிலாக வேறு யாரையும் சீரியல் குழுவினர் அறிமுகப்படுத்தவில்லை.
இதேவேளை ராஜூவும் சீரியலின் கதைபடி துபாய்க்குச் சென்று விட்டதாக கதையை லாவகமாக மாற்றிவிட்டனர் சீரியல் குழுவினர். இதனை ரசிகர்கள் எதிர்பார்க்காவிட்டாலும் சரி எப்படியும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இவர் சீரியலில் வந்துவிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் விளையாட்டு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் புது பிரச்சனையாக முளைத்து கொண்டிருந்தாலும் அதில் எதிலும் அதிகமாக தலையிடாமல் இருந்து வரும் ராஜு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய இடங்களில் ஆணித்தரமாக தெரிவித்து வருகிறார் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இவர் பாட்டு பாடி அசத்தி இருக்கும் அன்சீன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.