குறைகிறதா எரிபொருட்களின் விலை?
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஷாங்காய் நகரம் இரண்டு வருடங்களின் பின்னர் முற்றாக மூடப்படுவதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை $111.92 ஆகவும் WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 105.38 டொலராகவும் உள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலைகள் கணிசமான அளவு குறையலாம் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை சரிவால் கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு சந்தைகளிலும் நேற்றைய இழப்புகள் 7 சதவீதத்திற்கு அருகில் பதிவாகியுள்ளன. இதேவேளை, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி தொடர்ந்தும் நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை மற்றும் நேற்றிரவு எரிவாயு மற்றும் பெட்ரோலைப் பெறுவதற்காக கடைக்காரர்கள் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை நிருபர்கள் தெரிவித்தனர்.