விடுதலைபுலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா! மிலிந்த மொராகொட கூறிய பதில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் வழங்கிய பதில் சமூக வலைத்தளங்ளில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அனுபவம் மிக்க அரசியல்வாதியொருவர் சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பதிலளிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் , எனக்கு தெரியவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 30 வருட யுத்தத்தில் நான் எனது நண்பர்களை பலரை இழந்துள்ளேன். எங்களைச் சுற்றி பல இறப்புக்கள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் நாம் கடந்த கால தவறுகளை செய்யக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.