தனியார் வசமாகும் ஸ்ரீலங்கன் விமான சேவை?
ஸ்ரீலங்கன் விமான சேவையை (sri lanka airlines) தனியார் துறைக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் தரைவழிச் செயல்பாடுகள் மற்றும் சரக்குப் பிரிவு ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டி வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒரு விமானத்திற்கு மாதத்திற்கு சுமார் 5-8 லட்சம் அமெரிக்க டொலர்கள் குத்தகை செலுத்த வேண்டும் என்பதுடன் மொத்த செலவில் 25 வீதம் எரிபொருளுக்காகச் செலுத்த வேண்டியுள்ளது.
விமான குத்தகை (Leasing) கொடுப்பனவுகள் எரிபொருள் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரிப்பதால் சேவை நஷ்டமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (Srilanka Airlines) நிறுவனத்தின் நஷ்டம் இலங்கைக்கு பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில் குறிப்பிட்ட பங்குகளை தக்கவைத்து எஞ்சிய பங்குகளை தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதிக்குள் (செவ்வாய்கிழமை) முடிவு எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.