ஆசன முன்பதிவு செய்தது ஒரு குற்றமா? வைரலாகி வரும் புகைப்படம்
யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் நேற்று இரவு (9) நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கதிரைகளை தூக்கிச் சென்ற நபர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.
நேற்றைய நிகழ்வில் இடம்பெற்ற அசாதாரண நிலை என்பது முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்தால் கட்டுப்படுத்தக்கூடியதாகவே பலர் குறிப்பிடுகிறார்கள்.
குழப்ப நிலைக்கான காரணம்
ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சி இலவசம் என அறிவிக்கப்பட்டபோதும், பின்னர் ஆசனப்பதிவுகளுக்கு கட்டணம் அறவிடப்பட்ட போதும் ஏனையவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டதே இந்த குழப்ப நிலைக்கான காரணம் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிடத்தக்கது.
இதுவல்ல யாழ்ப்பாண மக்களின் அடையாளம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்பாடுகளில் செய்யப்படும் தவறுகள் பெரு நிகழ்ச்சியொன்றின் முடிவை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதற்கு நேற்றைய இசைநிகழ்ச்சி ஓர் உதாரணமாகி விட்டது என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாவும் மேலும் கூறியுள்ளனர்.