பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? அமைச்சர் அலி சப்ரி கூறிய பதில்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக இந்திய ஊடகம் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது,
புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான பேட்டிகள் தொடர்பாக உரிய தகவல் கிடைத்த பிறகு பதில் தரப்படும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பழ. நெடுமாறன் பரபரப்பு தகவல்
தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
மேலும் புலிகளின் தலைவர்பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது என்றும், இதனை பிரபாகரனின் அனுமதியுடன் வெளிப்படுத்துகிறேன்.
இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் இந்த தகவலை கூறுகிறேன் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.