தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? நாமல் சாடல்
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுப்பு காவலில் வைக்கப்பட்ட சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரையும் இராணுவத்தினரையும் பலவீனப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இதே தவறுதான் செய்யப்பட்டது.

எமது ஆட்சிக்காலங்களில் மாத்திரமே பாதுகாப்புப் படைகள் பலவீனப்படுத்தப்படாமல் பலமாக வைக்கப்பட்டிருந்தன" என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பணத்தைச் செலவு செய்து, சதித்திட்டம் மூலம் கவிழ்த்தமை தொடர்பில் தமது அரசாங்கத்தின் கீழ் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ஆட்சியைச் சதி மூலம் கவிழ்த்தமை குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால் இதுவரை பதில் இல்லை. இவ்வாறான சதித்திட்டங்கள் கண்டறியப்படாவிட்டால், எந்தவொரு அரசாங்கமும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
தற்போதைய அரசாங்கத்திற்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.