அரசியலுக்குள் வருகிறாரா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மகன்?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையும் சாத்தியக் கூறுகள் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளன.
ஆனால் இந்த அறிவித்தல் சந்திரிகா குமாரதுங்க தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளம் தலைமை
முன்னாள் ஜனாதிபதி அனர்த்த நிவாரண நிதியத்திற்கு 25 கோடி ரூபாய்களை அன்பளிப்புச் செய்துள்ள தகவலை அடுத்தே இந்தக் தகவல் களத்துக்கு வெளிவர ஆரம்பித்துள்ளன.
சந்திரிகா குமாரதுங்க இந்தப் பணத்தை நிதியத்துக்கு அன்பளிப்பு செய்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் நல்ல தலைமை அரசியலுக்கு வர எந்த வித தடையும் இல்லை என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.
தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அக்கா நடத்திய கொடூரம் ; வாக்குமூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்
அவ்வாறு இந்த தகவல் உண்மையாக இருப்பின் தற்போது இருக்கும் எல்லா இளம் அரசியல் தலைமைகளுக்கும் இவரது வருகை ஒரு சவாலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.