இலங்கை கடற்பரப்பில் ஈரான் கப்பல் மீட்பு பணிகள்
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பலான IRIS Dena வில் இருந்து மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
குறித்த பணிகளில் கடற்படை ஈடுபடும் காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன. இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது.

தாக்குதலில் 87 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடலில் மூழ்கி மாயமான எஞ்சியோரை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.