அலி கமேனியின் இறப்பை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் ஈரானிய மக்கள்
நேற்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு ஈரானின் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பெரும் கொண்டாட்டம்
நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஹாரன்களை ஒலித்தும், தெருவில் குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காட்சிகளும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளன.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களிலிருந்து ஆரவாரம் செய்து கைதட்டி கொண்டாடியுள்ளனர்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் காமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி என குறிப்பிட்டுள்ளமை முக்கியமானது.
🇮🇷 | Iranís celebran en las calles de Karaj, al norte del país, tras los reportes de la muerte de Khamenei. pic.twitter.com/f0PBeTgbQ8
— Gordos Defensa (@gordosdefensa) February 28, 2026