அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை வீழ்த்திய ஈரான்; அப்பளமாக நொறுங்கியது
ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர இராணுவத்தின் 'பார்ஸ்' செய்தி நிறுவனத்தின் பதிவின் படி, மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போதே இந்த அதிநவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது
இந்தத் தாக்குதலில் போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது. குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதால், அதில் பயணித்த விமானி தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனிடையே, விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என ஈரானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.