உச்ச பதற்றத்தில் ஈரான்! நிராகரிக்கப்படும் ட்ரம்பின் கோரிக்கைகள்
ஈரான் உடனான போர் காரணமாக தனது திட்டமிடப்பட்ட சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை ஒரு மாதம் வரை ஒத்திவைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
முதலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை அவர் சீனாவுக்கு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தார். இந்தநிலையில், போர் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 'சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து பாதுகாப்பாக வைத்திருக்க போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்' என கூறியிருந்தார்.
இதனை பல நாடுகள் மறுத்துள்ளதுடன் சில நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....