வளைகுடாவில் மீண்டும் பதற்றம் ; குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; பலர் காயம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் இன்று (3) 1 மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்ததாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தாக்குதலை அடுத்து விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்று குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தின் 'டி1' முனையக் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி, இந்தத் தாக்குதலை "கட்டிடத்திற்கு குறிப்பிடத்தக்க பொருள் சேதத்தையும் காயங்களையும் ஏற்படுத்திய ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என்று விவரித்ததாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் குவைத் மீதான இந்த தாக்குதல் வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.