வளைகுடா கடற்பரப்பில் ஈரான் தாக்குதல்கள் ; நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
வெளிநாடுகளில் பணியாற்றும் மாலுமிகள் அனுப்பும் பணத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தெற்காசியக் குடும்பங்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளன.
பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான தெற்காசியத் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இது அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
கடல் மார்க்கமாகப் பயணிக்கும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக நாடுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.