ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி....கோட்டைவிட்ட பஞ்சாப் அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. பஞ்சாப் அணியில் அறிமுக வீரர்களாக இஷான் பொரேல், ஆதில் ரஷித், ஐடன் மார்க்ராம் ஆகியோர் இடம் பெற்றார். ராஜஸ்தான் அணியில் அறிமுக வீரராக இவின் லீவிஸ் இடம் பெற்றார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் க்கு பிறந்தநாளான இன்று விளையாடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
முதலில் பேட்டிங்கை துவக்கிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகிய இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். இதனால், பவர்பிளே முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. முதல் 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய பஞ்சாப் அணியால் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் ஆடினர் .
தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இருவரும் அணியை வெற்றியை நோக்கி அளித்து சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டை எடுத்தது. அதிரடியாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 49 ரன்களுக்கு அவுட்டானார். 17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்துள்ளது.
வெற்றி பெற இன்னும் 19 பந்துகளில் 19 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
கடைசி ஓவரில் கார்த்திக் தியாகி கொடுத்த ட்விஸ்ட். நிகோலஸ் பூரண் 32 ரன்களுக்கு அவுட். பஞ்சாப் அணி வெற்றி பெற இன்னும் 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை.
அந்த சமயத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய தியாகி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தஹ்ன அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பேரவைத்தார்.