ருதுராஜ் கைகுவாட் - கான்வே ஜோடி கலக்கல்...ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
10 அணிகள் இடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏற்கனவே மராட்டிய மாநிலங்களான மும்பை மற்றும் புனேவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்றைய 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்-சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டுவைன் கான்வே மற்றும் ருத்ராஜ் கெஜ்ரிவால் களமிறங்கினர்.
இருவரும் நன்றாக விளையாடி துரிதமாக ஓட்டங்களை சேகரித்தனர். அரைசதம் கடந்த பிறகு இருவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .
மார்கோ ஜான்சென் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்ஸர் .1 பவுண்டரி பறக்கவிட்டார் கான்வே . மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட நிலையில் 99 ஓட்டங்களில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் .
அடுத்து வந்த கேப்டன் டோனி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி வரை டெவோன் கான்வே 85 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது.ஆடி முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் நுழைந்த ராகுல் திரிபாதி முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.
மார்க்ரம் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 47ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிக்கோலஸ் பூரன் இறுதி வரை போராடினார் . அவர் 64 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார் .
இருப்பினும் ஹைதராபாத் இலக்கை எட்ட முடியவில்லை.
இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.