'நாங்க ரெண்டே பேர்,நீங்க 11 பேர்'...சொல்லி அடித்த கில், ஐயர்: ஆர்சிபி படுதோல்வி
ஐ.பி.எல். 2021 லீக்கின் 31-வது ஆட்டம் அபு தாபியில் இன்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 4 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எஸ். பரத் 16 ரன்னுக்கும், மேக்ஸ்வெல் 10 ரன்னுக்கும், சச்சின் பேபி 7 ரன்களுக்கும், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஹசரங்கா ரன் ஏதும் டக்அவுட் ஆகி வெளியேறினர். கைல் ஜேமிசன் 4 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொக்க, ஹர்ஷல் பட்டேல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்களையுமிழந்து, 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி, 10 ஓவரில் ஆட்டத்தை முடித்தே விட்டனர்.
சரியாக 10 ஓவரின் ஆட்டம் முடிந்துவிட்டது. கில் 48 ரன்னில் ஆட்டமிழந்த போதும், களமிறங்கிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் வெங்கடேஷ் ஐயர் தனது 41 வது ரன்னில் ஆட்டத்தை முடித்துவிட்டார்.