யாழில் நீண்டகாலமாக வழிப்பறியில் ஈடுபட்டுவந்தவர்கள் சிக்கினர்
யாழில். கடந்த 3 மாதகாலமாக வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசி, 50 ஆயிரம் ரூபா பணம், கைப்பை மேலும் பல ஆவணங்களை திருடி சென்றமை, யாழ் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஒருவரின் தொலைபேசி, சுன்னாக பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கைபை , இரண்டு தொலைபேசி முப்பதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்தமை, மானிப்பாயில் நபர் ஒருவரின் கைப்பை திருடியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களையே மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கை பை மற்றும் ஏனைய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் அவர்கள் குடு பாவனையாளர்கள் என்பதனால் தமக்கு குடிப்பதற்கு பண தேவைக்காக வழிபறியில் ஈடுபட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.