கோட்டாபயவே இதை தீர்மானிப்பார்! நாமல் வெளியிட்ட தகவல்
மீண்டும் அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவே (Gotabaya Rajapaksa) தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.