யாழில் கட்டுப்பாட்டற்ற வேகத்தால் தாய், தந்தை , மகனுக்கு நேர்ந்த சோகம் (Photos)
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி, மடத்தடிப் பகுதியில் நேற்று (04) மாலை 4.30க்கு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையிலும் 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.