18 ஆம் திகதி குருந்தூர் ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கலுக்கு அழைப்பு!
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் பொங்கல் பொங்கி வழிபடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள தமிழ்மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை
கடந்த 08.08.23 அன்று குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.