நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியில் சேர அழைப்பு!
நடிகர் விஜய் அண்மையில், தமது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகளை நியமித்து, பணிகளைத் தீவிரப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், தமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.
சமத்துவ கொள்கை
கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இக்கணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் ,
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay @tvkvijayhq @actorvijay @BussyAnand pic.twitter.com/91V9f8jBIH
— Jagadish (@Jagadishbliss) March 8, 2024
"இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள்.
உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்" என அழைப்பு விடுத்துள்ளார்.